அழைப்பிதழ் தந்து !

Bharath Jeshly Wedding Photoshoot

அழைப்பிதழ் இன்றி வந்த 
நம் காதலை 
கௌரவிப்போம் 
திருமண 
அழைப்பிதழ் தந்து !

இளமையில் கல் !



கருப்பு வெள்ளை
புத்தகத்தில்
மெழுகுவர்த்தி வெளிச்சம்
எண்ணம் மாறி
வண்ணம் களையாத
அதே நிறக் கண்கள்

மௌனங்கள் மட்டும்
கடந்த காலத்தை நோக்கி
பயணிக்கிறது 

அங்கும்
வானவில்லுக்கு பதிலாக
வறுமைதான் தெரிந்தது 

திரும்பி வந்தேன்
திருப்பு முனையில் முடிந்தது
இளமையில் கல் !

(http://www.vallamai.com/?p=68312)

கடல் அலை ...!

a lady near the tides


விண்ணில் தெறிக்கும்
சூரியன் வரவில்
செலவானது எனது
காலைக் கடன்

கருணையுடன் முடித்து வைத்த
உணவுத்துறை

எழுச்சி முகமாய் தொடரும்
கல்விப் பணி

மாமியார் மருமகள்
கூட்டு முயற்சி

மாமனாரின் சமூகப் புரட்சி

அலுவலகப் பட்டி மன்றம்

ஆண் ஆதிக்கத்திலும் சிறு
அகிம்சை அன்பு

இதெல்லாம் முடித்தப் பின்
ஈவு மீதிக்கு எடுத்துச்
சென்றது …

மாலை நேர சுற்றுப் பயணம்
மதிமயக்கும் மல்லிகை வாசம்

சுட்டெரிக்கும் மணல் மேடு
கைம்மாறு கருதாமல்
கருங்கல்லைக் கட்டி அணைக்கும்
கடல் அலை

தும்பிக்கையாய் மாறி
நம்பிக்கை நீர்தெளிக்க

சுற்றத்தைவிட இன்பம்
வேறில்லை என்று
ஐயம் தெளிந்து
புன்னகைத்தாள்!

(http://www.vallamai.com/?p=68102)

மது ,மாது , செல்வம் !


@1 மது மயக்கத்தில் 
கிடந்தேன் 
தட்டி எழுப்பி 
நரகத்திற்கு போகக் கடவாய் 
என்று சபித்துவிட்டார்
எமதர்மன் !
@2 மாது மயக்கத்தில் 
விழுந்த என்னை 
எந்திரிக்க விடாமல் 
விரட்டுகிறது 
எயிட்ஸ் !
@3 செல்வ மயக்கத்தில் 
திரிந்த என்னை 
தேடிப் பிடித்து 
பிச்சையெடுக்க வைத்தது 
விதி !
- ஹிஷாலி ,சென்னை !
அமுதசுரபி மே மாத கவிதைப் புத்தகம்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்ரம் ஜி !



"ஐ "
தேசிய விருதையே 
மிஞ்சியது 
நட்சத்திரக் கிரிக்கெட்டர்களின் 
கேக் விருது !
மெர்சலாகிட்டேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்ரம் ஜி !

வாக்கு மாறாத நாக்கு ...!

Death hoax of Aachi Manorama
கடுகு பொரித்த சத்தம் கேட்டு 
கதிரவன் தன் கண் விழிக்க 
நாளை பொழுதும் நன்மை வேண்டி 
நாலு பேருக்கு உணவு அளிக்க 
கூனி குனிந்து கும்பிடு போட்ட காலத்திலும் 
கொடுத்த வாக்கு மாறாத நாக்கு 
சுத்தமான பாட்டியின் ஞாபகம் !

கலப்பை பிடித்த சத்தம் கேட்டு 
கம்பங்கூழும் தன் கண் மறைக்க 
கோமணப் பொழுதுடன் கொண்டவளை வந்ததடைந்து 
வாமன ராமனை வணங்கிய வாங்கிய 
கடனையெல்லாம் வாக்கு தவறாமல் 
கொடுத்தப்பின் சோற்றில் கைவைக்கும் 
தாத்தாவின் ஞாபகம் !

மதிமுகம் பூப்படைந்த சத்தம் கேட்டு 
மச்சான் தன கண் மெய்சிலிர்க்க 
குச்சில் கட்டும் தாய்மாமன் தான் 
மாதவி மகளானாலும் மாலையும் கழுத்துடன் 
மங்காத சீர்வரிசையில் மஞ்சள் தாலிக்கு 
என் மகனே சொந்தமென்று வாக்கு கொடுத்த 
தாய் மாமனின் ஞாபகம் !

வெட்டு குத்து சத்தம் கேட்டு 
வெறி பிடித்த ஜாதி கூட்டம் 
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் 
வாழ்ந்த காலம் தனை மறந்து 
உள்ளம் ஒன்றென கலந்துதவும் 
ஊரார் மத்தியில் மத்தாப்பு வெடி முழங்க 
மாசி மகம் திருவிழாவில் மடிந்து வணங்கும்
தெய்வவாக்கு ஞாபகம் !

(http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/2016_8.html)

நொங்கு வண்டி ...!

12968737_990685257652340_1672247774_n


நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு 
   சந்து பொந்து தாண்டி வந்தோம் 

பத்து மரக் காற்றிலும் 
   பட்ட துன்பம் தான் மறந்தோம் 

எட்டு திசை போனபின்பும் 
   விட்டு மனம் போகலையே 

ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும் 
    உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி 

– ஹிஷாலி                

http://www.vallamai.com/?p=67904

தமிழ் வாசல் - ஏப்ரல் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)



முட்புதர்கள்மேல் 
கண்சிமிட்டும்.... 
பனித்துளிகள்!
நிழல் தந்தது 
பந்தல் 
மரம் நடுவிழா ! 
கல்லறையில் 
ஓய்வெடுக்கிறது 
கலப்பை பிடித்த கைகள் !
மகளிர் தின கொண்டாட்டம் 
தலைமை தாங்கும் மருமகள் 
முதியோர் இல்லத்தில் !
குகையில் விளக்கேற்ற
தவமிருக்கும்... 
மின்மினிப்பூச்சுகள்!
தரையிறங்கும் வெயில் 
தணிக்கை செய்கிறது 
வீசும் காற்று !
விவசாயக் கடன் 
பெருகியது 
வீட்டுமனைகள் !
காந்திய வாதிக்கு 
சோறு போட்டது
கசாப்புகடைக் கூலி !

‎ஒத்தையிலே‬ ‎நிற்கிறியே‬ !



மை இருட்டு 
திருஷ்ட்டி பொட்டாய் 
அவன் முகம் 
பயத்தை தூக்கி எறிந்துவிட்டு 
வெக்கத்தை உடுத்திக்கொண்டாள் 
நிலா பொட்டனது 
வெள்ளி கொலுசின் வெளிச்சத்தில் 
வெண்ணிற ஆடை 
தகதகவென ஜொலிக்க 
தன்னிலை மறந்த பெண்மை 
தலைவனை எண்ணி தவம் கிடக்க 
தனியொரு காகம் கரைவதை கேட்டு 
கண்விழித்தவள் 
அள்ளி முடிந்த கொண்டையுடன் 
ஆதவனே ...
அடுத்தொரு விடியலை தராயோ 
என் தலைவனுடன் கை கோர்க்க !

ஹோலி ...!

girls with holy colors

வறுமை மறந்து சிரித்திடவே 
    வானவில் லாட்டம் ஆடிடுங்கள் !
பெருமை சிறந்து திகழ்ந்திடவே
      பொறுமை யாட்டம் இருந்திடுங்கள் !
கருணை கொண்ட விளங்கிடவே 
     கடவு ளாட்டம் மின்னிடுங்கள் !
சாதி மறந்து வாழ்ந்திடவே 
     சமத்துவ ஹோலியை விதைத்திடுங்கள் !

(http://www.vallamai.com/?p=67672&cpage=1#bookmarks)

ஏப்ரல் மாத கவிச்சூரியன் மின்னிதழ் - ஹைக்கூ 



கழனியெங்கும் 
விளைச்சலாய்   
கட்டிடங்கள்... !
புதுமனை புகுவிழா
நிரம்பி வழிகிறது 
வாங்கிய கடன் …!
கதம்பத்தை
அழகாக்கியது
ஜாதி மல்லி ... !
வெட்கத்தால் சுருங்கிய 
பௌர்ணமியின் நாணம் 
தேய்பிறை .. . !

mhishavideo - 145